ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஜப்பானியக் கட்டடக்கலை நிபுணர் டாடோ அண்டோ அவர்கள், இந்த ஆண்டிற்கான சிறப்புமிக்க “Andrée Putman Lifetime Achievement Award” வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றிருக்கிறார். இந்த விருதினை, “Createurs Design Awards” நிறுவனம் அவருக்கு அளித்துள்ளது.

டாடோ அண்டோ, நூற்றிற்கும் பொது இடங்கள், வழிபாட்டு தளங்கள், அருங்கட்சியங்களை போன்றவற்றை மேற்பட்ட உலகளவில் வடிவமைத்தற்காக இவ்விருதை பெறுகிறார். ஒளி மற்றும் இயற்கையை சார்ந்து இவர் வடிவமைப்பின் முக்கிய சிறப்புத் தன்மையாக இருக்கும். இவ்விருதானது கட்டிடக்கலை, உள்வடிவமைப்பு, பொருட்களை வடிவமைப்பது, பத்திரிகைத்துறை, புகைப்படத்துறை, அருங்காட்சியக காப்பாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.இவ்விருதுக்காக உலக அளவில் துறை சார்ந்த 300 தலைவர்கள் மூலம், வாக்கு பதிவு செய்து வெற்றி பெற்றவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டாடோ அண்டோ அவர்கள் பாரிஸ் நகரம் பழைமை மற்றும் புதுமைகளின் உறைவிடமாக உள்ளது என்கிறார். இங்கு உள்ள கட்டிடங்கள் இந்த நகரின் வரலாற்றையும், புதிய கட்டுமானத்துறையின் நவீன கட்டிடங்களையும் உள்ளடக்கி காணப்படுகிறது. தன்னுடைய வடிவமைப்பில் எப்போதும் ஓர் இடத்தின் தன்மையும், அதன் உணர்வையும் காண்பிக்கும் வகையிலும், பார்க்கும் பொது புதுமையாக தெரியும்படியும் வடிவமைப்பதாக கூறியுள்ளார். இவ்விருது இவரின் “The Bourse de commerce, He Art Museum” என்னும் கட்டிட வடிவமைபிற்காக அளிக்கப்பட்டுள்ளது.

“The Bourse de commerce” எனும் இந்த கட்டிடம், சென்ற நூற்றாண்டில் வர்த்தக நிறுவனமாக இருந்துள்ளது. கோதுமை வியாபாரம் செய்பவர்கள் கூடி, பேசுவதற்கான இடமாக இருந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் இது சீரமைக்கப்பட்டு பிரெஞ்சு வணிகர் பிணைல்ட் குடும்பத்தின் தனி சேகரிப்பில் உள்ள கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. “He Art Museum” சீனாவின் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் காட்சிப்படுத்தியுள்ள அருங்காட்சியகமாகும்.

Sketches by: Ar. Priya Prakash

இவர் ஆம் 1978 ஆண்டு ஜப்பானின் கட்டடகலை நிறுவனத்திடம் இருந்தும், 1993 ஆம் ஆண்டு ஜப்பானின் கலைகூடத்திடமிருந்தும், 2003 கலாச்சாரத்தைக் காக்கும் மனிதர் என்றும், கட்டடக்கலையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 1995 பிரிட்ஸ்கர் பரிசு (Pritzer prize) விருதையும் பெற்றுள்ளார்.

டாடோ அண்டோ அவர்கள் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் இயற்கை வனப்புடைய நிலம் (Lanscape Design) கட்டிடக்கலையை வடிவமைப்பதில் சிறந்தவர். இருப்பினும் இவர் தனது இளமை காலத்தில் ஒரு குத்து சண்டை வீரராக இருந்துள்ளார். கட்டிக்கலை நிபுணர் ரைட் அவர்களின் “இம்பிரியல் தங்கும் விடுதியின்” வடிவமைபை பார்த்து வியந்து, பின்பு இவரும் இப்படியான கட்டிடங்களை உருவாக்க எண்ணம் கொண்டு, இரவு வேளைகளில் வரைபடங்கள் வரையவும், உள்வடிவமைப்பு செய்யவும் கற்றுக்கொண்டுள்ளார். பிறகு உலகின் சிறந்த கட்டிடங்களை பல நாடுகளுக்குப் பயணம் சென்று பார்த்து வியந்தார். அதிலிருந்து தனக்காக ஒரு பாணியையும் உருவாக்கிக்கொண்டார். இவர் பெரும்பாலும் வழிபாட்டுத்தலங்கள், வீடுகள் போன்றவற்றை வடிவமைத்துள்ளார். ஹைக்குவை போன்றவை இவர் கட்டிடங்கள். ஒன்றும் இல்லாதவை, வெற்று இடங்கள் இவரின் பாணி எனலாம். பெரும்பாலும் சுற்றி வரும் பாதைகள் சிக்கலாக தெரிந்தாலும் , எளிமையாக உள்ளது இவரின் கட்டிடங்கள்.

Sketches by: Ar. Priya Prakash

மேலும் பல கட்டிடக்கலை சார்ந்த செய்திகள், நிகழ்வுகள், கட்டுரைகளை படிக்க தளி பக்கத்தை தொடருங்கள்.

மறுமொழி இடவும்